கள்ள சூதாட்டம் ஏமாற்று வேலை நிமித்தம் 51 சீன நாட்டவர் மீது குற்றச்சாட்டு

0

மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியைக் கள்ள சூதாட்ட மையமாக மாற்றி, பல இணைய ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதற்காக குற்றம் நிமித்தமாக மொத்தம் 22 சீன நாட்டவர்களுக்கு 20,000 ரிங்கிட் அபராதமும் ஒரு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மெண்டரின் மொழியில் வாசிக் கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு மாஜிஸ்திரேட் முகமது நஸ்ரின் அலி ரஹிம் இத்தீர்ப்பை வழங்கினார்.
தாமான் கோத்தா பெண்டாஹாரி, கிளேபாங் பெசாரில் கடந்த நவம்பர் 19ம் தேதி மாலை மணி 4 முதல் 4.10 வரையிலான காலகட்டத்தில் அவர்கள் அனைவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. நவம்பர் 19ம் தேதி முதல் அவர்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நஸ்ரின் உத்தரவிட்டார். இக்குற்றம் தொடர்பில் சீனக் குடிமக்களாகிய 51 பேர் கைது செய்யப்பட்ட வெவ்வேறு நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 10 பேர் பெண்கள். அவர்களில் 21 பேர் இணையம் வழி கடன் வசதி ஏற்பாடு செய்து தருவதாக ஏமாற்றிய செயலில் ஈடுபட்டதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேர் நோர்மா இஸ்மாயில் முன்னிலையிலும், எஞ்சிய 13 பேர் எலிசபெத் பாயா வான் முன்னிலையிலும் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் நவம்பர் 19-20ம் தேதிகளில் தாமான் கோத்தா பெண்டாஹாரி கிளேபாங் பெசாரில் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
420ஆவது குற்றவியல் சட்டத்தின் 120பி(1)-ஆவது ஷரத்தின் கீழ் திட்டமிட்டு ஏமாற்றிய குற்றத்தின் அடிப்படையில் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
அவர்களை பிணையில் விடுவிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஜனவரி 8ம் தேதி மீண்டும் செவி மடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + twenty =