கல்வி துணையமைச்சரின் துரித நடவடிக்கை

தம்முடைய நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ள சுங்கை ரேலா தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டடம் நிறைவு பெறுவதற்கு துணைக் கல்வியமைச்சர் எடுத்துக் கொண்டுள்ள தீவிர முயற்சிக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் பெற்றோர்களின் சார்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரான தம்முடைய மகிழ்ச்சியைக் கூறிக் கொள்வதாக கேசவன் சுப்பிரமணியம் அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே பாரிசான் அரசு சுங்கை ரேலா தமிழ்ப்பள்ளிக்கான புதியக் கட்டடம், முழுமையாக மாணவர்களுக்கு பயன்படுவதற்கு இன்னும் 5 விழுக்காடு கட்டடப்பணி சென்றடையாமலும் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 மாதங்களாகவே இப்பிரச்சினை இழுபறியாக உள்ளதை தாம் கடந்த 5.12.2018இல் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கல்வி துணையமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் கேசவன் குறிப்பிட்டார்.
தற்போது மாணவர்கள் பயன்படுத்தி வரும் பலகைக் கட்டடம் போதுமான பாதுகாப்பு இல்லாமலும் ஆங்காங்கே  கரையான்கள் அரித்துக்கொண்டிருக்கும் சம்பவங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விளக்கியதுடன் புதிய கட்டடப் பிரச்சினைக்கு  எப்போது தீர்வு பிறக்கும் என தாம் கேள்வி எழுப்பி இருந் ததாகவும் கேசவன் கூறினார். இந் நிலையில், கல்வி துணையமைச்சர் தம்முடையக் கேள்விக்கு பதில் அளிக்கையில் இப்பிரச்சினை தேமு ஆட்சியில் நடந்திருந்தாலும் அவர்கள் செய்த தவறுக்கு பரிகாரமாக பக்காத்தான் ஹராப்பான் கல்வி அமைச்சு விரைவில் தீர்வு காணும் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதாகவும் மேலும், அந்த குத்தகையாளர் தாமதத்திற்கு அரசாங்கம் அபராதம் விதித்துள்ளது என்றும் துணையமைச்சர் கூறியிருந்தார்.
 இனியும் காலத்தை கடத்தாமல், புதிய துணைக் குத்தகையாளர் ஒருவர் மூலமாக கல்வி அமைச்சுக்கு மீண்டும் மனு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படும்.
இந்நிலையில், பணம் பற்றாக்குறையைக் காரணம் காட்டும் குத்தகையாளர் தமக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை தள்ளி போடும்படி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அதற்கு அமைச்சு தற்காலிக ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் துணையமைச்சர் கூறியிருந்தார் என்று கேசவன் குறிப்பிட்டார்.
குத்தகையாளர் தமக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அரசு அந்த குத்தகையாளர் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்த கல்வித் துணையமைச்சர் எது எப்படி இருப்பினும் நான்கு மாதக்காலத்திற்குள் புதிய கட்டடத்தின் பயன்பாட்டினை மாணவர்கள் பெறுவார்கள் என்றும் அவர் தம்முடைய கேள்விக்கு பதில் அளித்துள்ளதாக கேசவன் தெரிவித்தார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − ten =