கல்வி அமைச்சின் திட்டத்திற்கு மலேசியத் தமிழ்க் காப்பகம் எதிர்ப்பு! – சு.வை. லிங்கம்

0

எல்லா மொழிப் பள்ளிகளிலும் மலாய் மொழிப் பாட நூலில் ஜாவி எழுத்துகளை புகுத்தக் கல்வி அமைச்சு திட்டமிட்டிருப்பது தமிழர்கள் தேசிய மொழியைப் படிப்பதில் பிரச்சினையை எதிர் நோக்க வேண்டி வரும் . இதனால் தமிழ் மாணவர்கள் தேசிய மொழியில் பாண்டித்தியம் பெறுவதில் தடை ஏற்படும் என்பதால் மலேசியத் தமிழ்க்காப்பகம் கல்வி அமைச்சின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்புகிறது என்பதை தேசியத் தலைவர் சு. வை. லிங்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசியாவை தொடர்ந்து தேசிய மொழியை மலாய்க்காரர்கள் அல்லாத நாங்கள் ( தமிழர்கள்) படித்துவருவதில் அக்கறை கொண்டு வருகிறோம். தமிழ்ப் பள்ளிகளில் இப்போதிருக்கும் மலாய் மொழிபாட தேர்ச்சியில் ஒரு சில மாணவர்களைத் தவிர பெரும்பாலான மாணவர்கள் சிரமத்தை எதிர் நோக்குகிறார்கள். அப்படிப்பட்ட சிரமம் இருந்தபோதும் தேர்விற்காக மாணவர்கள் கடுமையாக போராடுகிறார்கள் இதனை பள்ளி தேர்வு முடிவிலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடியும் . அப்படிப்பட்ட சூழல் இருந்தபோதும் தமிழ் மாணவர்களின் நிலை குறித்து கவனத்தில் கொள்ளாமல் செயல்படுவது வேதனையாக இருக்கிறது. மலாய்க்கார மாணவர்களை மட்டும் கருத்தில் கொண்டு தேசிய மொழி பாட நூலில் ஜாவி எழுத்து வடிவில் மலாய் மொழியை புகுத்த முயல்வதாக தெரிகிறது. மலாய்க்காரர்கள் அல்லாத தமிழர்களை கவனத்தில் கொள்ளாமல் ஜாவி எழுத்து வடிவத்தை அறிமுகப்படுத்துவதும் கல்வி அமைச்சின் திட்டம் , தமிழர்களின் உரிமைக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கும் என்று தமிழர்களிடையே பய உணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்குப் போதிக்கப்படும் மலாய் நூலில் ஜாவி எழுத்துவடிவிலான எழுத்துகளை தவிர்க்கும் படி மலேசியத் தமிழ்க் காப்பகம் கல்வி அமைச்சைக் கேட்டுக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =