கல்வியமைச்சர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை

0

கல்வியமைச்சர் பதவியில் தாம் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்தாபா முகமட் தெளிவுபடுத்தினார்.கல்வியமைச்சுக்குத் தாம் தலைமையேற்க வேண்டும் என்ற சில தரப்பினரின் பரிந்துரைகளை அவர் நிராகரித்தார்.

கிளந்தான் மாநிலத்தில் மட்டும்தான் தாம் கவனம் செலுத்தப்போவதாக ‘தோக் பா’ என அழைக்கப்படும் முன்னாள் அனைத்துலக வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சருமான அவர் தெரிவித்தார்.
கல்வியமைச்சர் பதவிக்கு அந்த முன்னாள் அனைத்துலக வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் பொருத்தமானவர் என தேசிய பேராசிரியர்கள் மன்றத் தலைவர் சம்சுல் அம்ரி பஹாருடினின் அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் கல்வியமைச்சர் பதவியை மஸ்லீ மாலிக் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் முஸ்தாபா முகமட்தான் என சில தரப்பினர் பரிந்துரை செய்து வருகின்றனர்.
முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான முஸ்தாபா, கடந்தாண்டு பிரதமர் துன் மகாதீர் தலைமையிலான பெர்சத்து கட்சியில் இணைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 8 =