கலைமுகிலன் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்

0

விடுதலைப் புலிகளின் இயக்கத்தோடு தொடர்புடைய அம்சங் களை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட கலைமுகிலன் விஷயத்தில் கெஅடிலான் கட்சி ஆதரவு தெரிவிக்கவில்லை. அவருக்காக குரல் கொடுக்கவில்லை என்று அவரது மனைவி கூறிய குற்றச்சாட்டு குறித்து கெப்போங் கெஅடிலான் தனது பதிலை தெரிவித்துள்ளது.
தன் கணவர் ஒரு அப்பாவி என்றும் கெஅடிலான் கெப்போங் கிளையில் இருந்தவர் என்ற முறையில் யாரும் அவருக்காக முறையிடவில்லை என்று கலைமுகிலனின் மனைவி தமிழ் மலர் நேற்று முன்தினம் நீதிமன்ற வளாகத்தில் அழுத நிலையில் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்த பதிலளித்த அந்த கெப்போங் டிவிஷனின் தற்போதைய தலைவர் நாய்ம் புருண்டேஸ், காவல்துறையின் விசாரணைக்கு இடமளிக்கும் வகையில் நாம் காத்திருந்தோம். எனினும் கலைமுகிலன் கட்சிக்கு அளித்துள்ள பங்களிப்பை நாம் மதிக்கிறோம் மறந்துவிடவில்லை.
ஓர் ஜனநாயக நாட்டில் சில அதிகார எல்லைகளை நாம் மதிக்க வேண்டும். அந்த வகையில் காவல்துறை உள்துறை அமைச்சின் விசாரணைக்கு வழி விட்டோம். இப்போது அந்தக் குடும்பத்தின் தேவைகளுக்கு கெப்போங் கெஅடிலான் டிவிஷன் தேவையான உதவிகளை செய்யும் என்றார் அவர். ஓர் உலோகப் பொருள் விற்பனையாளரான கலைமுகிலன் (வயது 28) மீது 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புடைய அம்சங்களை வைத்திருந்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 8 =