கலவரத்தில் ஈடுபட்டவர்களின் படங்கள் வெளியிடப்படும்

0

சுபாங் ஜெயா, ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மூண்ட கலவரத்தின் போது, அதில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் பொது மக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தப் படும் என்று புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத் துறை இயக்குனர் ஹுஸிர் முகமது கூறினார்.
கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் கூட்டரசுப் பிரதேசம் மற்றும் சிலாங்கூர் மாநிலக் காவல் படைகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. காட்சிப்படுத்தப்படும் நபர்கள் காவல்துறையின் புலன் விசாரணைக்கு உதவக் கூடும்.
தீயணைப்பு வீரர் முகமது அடிப் இக்கலவரத்தினால் கொல்லப்பட்டதாக கொரோனர் ராபியா முகமது கடந்த செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பளித்தார். அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இக்கொலைக்குக் காரணமானவர்கள் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 1 =