கம்போங் பஞ்சாரானில் நச்சுக் கழிவுத் தூய்மைக்கேடா??

Johor Department of Environment (DOE) director Mohd Famey Yusoff.

கெம்பாஸ், கம்போங் பஞ்சாரானில் நச்சுக் கழிவுத் தூய்மைக்கேடு ஏற்பட்டதாகக் கூறுவதை ஜோகூர் மாநிலச் சுற்றுலாத் துறை (ஜே.ஏ.எஸ்.) மறுத்தது. அது உண்மையில் நீண்டக் காலமாக நிலுவையில் தீர்வு காணப்படாமல் இருக்கும் சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் நிலமாகும் என்று இயக்குநர், முகமட் ஃபாமி யூசோப் தெரிவித்தார். இப்பகுதியில் ஏற்கெனவே சில முறை துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. இருந்த போதிலும் இந்த குப்பைக் கொட்டப்படும் நிலம் ஒரு தனியார் நிலம் மட்டுமின்றி அது விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் இவ்விவகாரம் மற்ற நிறுவன அதிகாரத்தின் கீழ் இருப்பதால் எங்களால் ளெந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. அதனால் கெம்பாசிலுள்ள கம்போங் பஞ்சாரானில் நச்சுக் கழிவுத் தூய்மைக்கேடு ஏற்பட்டதாகக் கூறுப்படுவதில் உண்மையில்லை. இச்சம்பவம் தொடர்பில் பொதுத் தூய்மை மற்றும் திடக்கழிவு நிர்வாக அமைப்பு, மாவட்ட நில அலுவலகத்திடம் புகார் செய்யப்பட்டு விட்டது. இதன் மூலம் நிலப் பறிமுதல், சுத்தப்படுத்த உத்தரவிடுதல் உட்பட இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று பத்திரிகையாளர்களிடம் முகமட் ஃபாமி யூசோப் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + two =