கம்பாரில் புதிய நவீன அரசு மருத்துவமனை

0

கம்பார் புதிய நகரில் நவீன அரசு மருத்துவமனைக்கான மேம்பாட்டு கட்டுமானப்பணி விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் இது இந்த தொகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் நெடுநாள் எதிர்பார்ப்பாகவும் இருந்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டுக்
கான வரவு – செலவு அறிக்கையில் நிதியமைச்சர் லிம் குவான் எங் கம்பார் புதிய மருத்துவமனையுடன் நாட்டில் மேலும் தேவையான இடங்களில் மருத்துவமனை அமைப்பதற்கும் இருக்கும் மருத்துவமனைகளை சீராக்குவதற்காக 1.6 பில்லியன் வெள்ளி ஒதுக்கியுள்ளார் என்றும் பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 28 ஏக்கர் நிலப்பரப்பில் 12.7 மில்லயன் வெள்ளி செலவில் அமைக்கப்படும் இந்த மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்டுள்ள சிறந்த மருத்துவமனையாகவும் இது மக்கள் வரவேற்பினை பெறும் என சிவநேசன் குறிப்பிட்டார்.
இங்கு எல்லாவித நோயாய்களுக்கும் சிகிச்சை வழங்கும் மாவட்ட மருத்துவமனையாக திகழும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்பொழுது மாநிலத்தில் 4 அரசு சிறப்பு மருத்துவமனைகள் உள்ளன.
அவற்றில், ஈப்போ ராஜா
பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை, தைப்பிங், மஞ்சோங், தெலுக் இந்தான் ஆகிய மருத்துவமனைகள் ஆகியவை அடங்கும் என்றார் அவர்.கம்பாரை வசிப்பிடமாகக் கொண்ட மலேசியர்களுக்கு இது ஒரு நற்செய்தி. ஏனெனில், திட்டமிட்டபடி ஒன்று அரசு மருத்துவமனை. மற்றொன்று தனியார் யுத்தார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் கட்டப்படும் மருத்துவமனை ஆகும். ஆனால், யுத்தார் மருத்துவமனை கட்டி முடிப்பதற்குள் அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் உறுதி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 14 =