கமுண்டிங் தடுப்பு மையத்தில் ஊரடங்கு

தைப்பிங்கில் உள்ள கமுண்டிங் தடுப்பு மையத்தில் இன்று தொடங்கி 2 வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது என்று சிறை இலாகா அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு வரும் அக்டோபர் 29ஆம் தேதியுடன் நிறைவடையும்.
சிறைக் கைதிகளை அவர்களின் குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் தூதர்களும் அரசு சாரா அமைப்பின் பிரதிநிதிகளும் சந்திப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிகள், சமூக சேவைகள், விளையாட்டு, பொழுதுபோக்கு நிகழ்வுகள் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளான கைதிகள் இருக்கும் புளோக்குகளுக்கு ஊரடங்கு விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 3 =