கப்பலில் ஏற்றிச் சென்ற செம்மரி ஆடுகள் நீரில் மூழ்கி இறந்தன

0

சுமார் 15,000 செம்மரி ஆடுகளை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் ஆயிரக்கணக்கான செம்மரி ஆடுகள் நீரில் மூழ்கி பலியாயின.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமையன்று ரோமானியா கடலில் அருகே நிகழ்ந்தது. ‘குயீன் ஹிந்’ என்று அழைக்கப்படும் சரக்குக் கப்பல் மிடியா துறைமுகத்திலிருந்து சவூதி அரேபியாவை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. சிறிது நேரத்திலேயே, அந்த கப்பல் பாரம் தாங்காமல் கவிழ்ந்ததோடு செம்மரி ஆடுகளும் நீரில் மூழ்கின.

ரோமானியா நாட்டின் கால்நடை அதிகாரி கூறுகையில், வெறும் 33 செம்மரி ஆடுகள் மட்டுமே உயிருடன் காப்பாற்றப்பட்டது. மற்றவைகள் அனைத்தும் நீரில் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அந்த சரக்கு கப்பலில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் அனைவரின் கண்டனத்திற்கும் குறைக்கூறலுக்கும் ஆளாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =