கனத்த மழை பலத்த சூறாவளியால் மருத்துவமனை வளாகம் சரிந்தது


நேற்று தெலுக் இந்தான் நகரில் வரலாற்றில் இல்லாத நிலையில், இடி, மின்னல், கனத்த மழையுடன் கூடிய சூறாவளியினால் தெலுக் இந்தான் மாவட்ட அரசு மருத்துவமனை மக்கள் நடந்து செல்லும் கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நடைபதைக்கான பலகை கட்டடம் சரிந்து தரையில் விழுந்தது.
அந்த நிலையில் மக்கள் பாதுகாப்பு இடத்தைத் தேடி ஓடினர். மேலும், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் வாகனங்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியின என்றும் கூறினர்.
நல்ல வேளையாக மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. கடந்த 45 ஆண்டுகளுக்கு பின்பு இந்த மருத்துவமனை வளாகத்தில், கட்டடம் சரிந்து விழுந்த சம்பவம் இதுவே முதல் முறையாகும் என்றனர்.
நேற்று மாலை 4.32 மணிக்கு கருமேகங்கள் சூழப்பட்டது. அரை மணி நேரம் சென்றப்பின்பு சற்றும் எதிர்பாராத நிலையில் சுமார் 60 நிமிடங்கள் வரையில் கனத்த மழையுடன் வீசிய சூறாவளியினால் இச்சம்பவத்தினால் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினர்.
இதனிடையே, காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் பொதுமக்களுக்கு மாற்று வழியை பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளும்படி ஆலோசனை கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + sixteen =