கனத்த மழையால் சுங்கை ஜாவி பகுதி வெள்ளக்காடானது

நேற்று முன்தினம் மாலை தொடர்ந்து பெய்த கடும் மழையினால், தென் செபெராங் பிறை மாவட்டத்திலுள்ள சுங்கை ஜாவி பகுதி வெள்ளக்காடானது. இங்குள்ள கம்போங் சேது,சுங்கை டூரி,தாமான் ஜாவி ஜெயா, கூட்டரசு சாலை,தாமான் சுங்கை டூரி பெர்மாய் பகுதியில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.
கடும் மழையால் சுங்கை ஜாவி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சுங்கை ஜாவி பகுதியின் நகர சாலையில் வெள்ளம் கரை புரண்டோடியதால், போக்குவரத்து நிலைக்குத்தியது.
நிபோங் தெபால் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் படையினர், தன்னார்வப் படையினர், ரேலா படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மக்கள் யாரும் துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்படவில்லை.
பல ஆண்டுகளாக இப்பகுதியில் ஏற்பட்டு வரும் மோசமான வெள்ளப் பிரச்சினைக்கு பினாங்கு மாநில அரசாங்கமும்,தொகுதி சட்டமன்ற, நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளும், இதுவரையில் எந்தவொரு நிரந்தரமான தீர்வையும் காணவில்லையென குடியிருப்பாளர்கள் வேதனையுடன் தெவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + three =