கதை வகுப்பு 2.0

சிறுகதையின் கதைப் பொருள் என்று பார்க்கின்ற வேளையில் அது ஒரு பெரிய தடத்தைக் காட்டுவனவாக இருக்கும். நாம் அதிலிருந்து ஒரு சிறு விதைத் துளியை எடுத்து நமது சிறுகதையின் கருப்பொருளாக வைத்துக கொள்ள வேண்டும். உதாரணமாக, கல்வி என்ற கதைப் பொருளிலிருந்து மூன்று நிலைகளில் கருப் பொருள்கள் வெளிப்படுவதைப் பார்க்கலாம். முதலில் கல்வியால் வரும் சவால்களை மாணவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்று கதையாசிரியர்கள் கையாண்டுள்ளனர் என்று பார்க்கலாம். சி. வடிவேல் தனது ‘கண்ணன் ரிமூவ் வகுப்பு படிக்கிறான்’ என்ற கதை மாணவர் பிரச்சினை என்ற கருப்பொருளையொட்டி எழுதப்பட்ட தாகும். இக்கதையில் சி. வடிவேல் ஒரு தமிழ்ப்பள்ளி மாணவன் இடைநிலைப் பள்ளிக்குச் சென்ற வேளையில் அவன் எதிர்நோக்குகின்ற மொழிப் பிரச்சினையை விவரிக்கின்றது. இதுநாள் வரையில் எல்லாப் பாடங்களுக்கும் போதனை மொழியாக விளங்கியது தமிழ் மொழியாகும். ஆனால் இடைநிலைப் பள்ளியில் போதனை மொழியாக இருப்பது ஆங்கிலமாக இருக்கிறது. இது தமிழ்ப்பள்ளியில் சிறந்து விளங்கிய மாணவன் இடைநிலைப்பள்ளியில் சிரமத்தை எதிர்நோக்குகின்றான். குறிப்பாக கணிதப் பாடத்தில் ‘‘LCM’’ மற்றும் ‘HLF’ என்ற இரு சூத்திரங்களுக்குமான செய்தி புரியாமல் தவிக்கின்றான். பின்னர் ஒரு மூத்த மாணவனிடம் அக்கணித கேள்வியை எப்படி செய்வது என்று வினவுகிறான். அம்மாணவன் அக்கணிதத்திற்கு விடையைக் காணும் வழிமுறையை செய்யும் போது இவனுக்கு இப்பொழுது தெளிவாக விளங்குகிறது. காரணம் இந்த இரண்டு சூத்திரங்களையும் தமிழ்ப்பள்ளியில் நிச்சயமாக படித்திருக் கின்றான். ‘அதம பொது மடங்கு’ மற்றும் ‘உத்தம பொது மடங்கு’ என்று அவன் அறிந்த சூத்திரம்தான் அது. இந்தக் கதையில் மொழியால் ஒரு மாணவன் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினை என்பது கருப்பொருளாக அமைகிறது. அதே வேளையில், பாரியின் ‘சத்து ரிங்கிட்’ என்ற கதை வறுமை எப்படி கல்வியைப் பாதிக்கின்றது என்ற கருப் பொருளைக் கொண்டு வருகின்றது. இக்கதையில் ஒரு தோட்டத்தில் ஆயா வேலை செய்யும் பெண் தன் மகனை பள்ளிக்கு அனுப்ப போக்குவரத்திற்கான பணம் இல்லாத சூழலில் மொழி தெரியாத நிலையில் ஒரு சீனரிடம் தட்டுத்தடுமாறி பேசி ஒரு வெள்ளியைப் பெற்று மகனை பள்ளிக்கு அனுப்பு கிறாள். இந்த கதையில் கல்வியும் வறுமையும் எதிர் எதிராக நின்று ஒரு போராட்டத்தை உருவாக்குகின்றன. இங்கு வறுமை என்பது ஒரு கருப் பொருளாக கல்வி என்ற கதைப் பொருள் ஊடாக அமைந்துள்ளது. அதே வேளை, கார்த்திகேசுவின் ‘பிள்ளையார் பந்து’ என்ற கதை பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு கல்விப் போதிப்பதில் ஏற்படும் கவால்களை எதிர்நோக்குவதை விவரிக்கின்றது. இங்கு கல்வி என்ற கதைப் பொருளில் ஆசிரியரின் போராட்டம் என்பது கருப் பொருளாக அமைகிறது. இக்கதையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தனது பயிற்சியை முடித்த பள்ளிக்கு பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர் ஒருவர் மிகுந்த ஆர்வத்துடன் தான் கற்றுக்கொண்ட அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி கல்வியை போதிக்கின்றார். ஆனால் மாணவர் களால் எதையும் புரிந்துக்கொள்ள இயல வில்லை என்ற ஆதங்கத்திலே அவர் களை தண்டிக்கின்றார். இதைக் கவனித்த தலைமையாசரியர் மாண வர்களை மிகவும் கடினமாக தண்டிக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறுகின்றார். இந்த மாணவர்கள் பிணங்கள் போல் இருக்கிறார்கள் என்று இளம் ஆசிரியர் அந்த மாணவர்களை குறிக்கின்றார். இளம் ஆசிரியர் மாணவர்களுக்கு இயந்திர கதியில் பாடம் போதித்து விட்டு வெறுமனே இருந்து விடுகிறார். இந்த இளம் ஆசிரியரிடம் ஏற்பட்ட மாற்றம் தலைமை யாசிரியருக்கு மனத்துயரைக் கொடுக்கின்றது. ஒருநாள் திடலில் அந்த இளம் ஆசிரியரின் மாணவர்கள் பிள்ளையார் பந்து விளையாட்டினை விளையாடிக் கொண்டிருந் தனர். இதைக் கண்ட தலைமையாசிரியர் அந்த இளம் ஆசிரியரிடம் இன்றுதான் நான் பிணங்கள் இவ்வளவு லாவகமாக பிள்ளையார் பந்து விளையாடுவதைக் காண்கின்றேன் என்று கூறுகிறார். தலைமை ஆசிரியரின் கருத்தினை புரிந்து கொண்ட இளம் ஆசிரியர் தன் தவறை உணர்கின்றார். தலைமை யாசிரியரும் எல்லா மாணவர்களுக்கும் தனித் திறமைகள் உள்ளன. அதனை நாம்தான் அடையாளம் காண வேண்டும். கற்றல் கற்பித்தலில் இதைக் கடைப்பிடித்தால் மாணவர்கள் நலம் பெறுவர் என்றுகூறுகிறார். மேற்கண்ட இம்மூன்று கதைகளும் கதைப் பொருளாகக் கொண்டிருப்பது கல்வி, ஆனால் கதைக் கரு என்று கூரம் போது மூன்று கோணங்களில் ஒவ்வொரு கதையும் கருப் பொருளை கொண்டிருப்பதை உணர முடியும். இதுபோலவே நாம் கதையை எழுத முடிவு செய்தவுடன் ஒரு கதைப் பொருளில் இருந்து ஒரு கருப் பொருளைத் தேர்ந் தெடுத்து அதில் நடக்கும் போராட் டங்களை விவரிக்க வேண்டும். இதில் மிக முக்கியமான ஒரு செய்தியை யாவரும் கடைப்பிடிக்க வேண்டியது. யாதெனில் ஒரு கதைக்கு ஒரு கருப் பொருள்தான் இருக்க வேண்டும். ஒரு மைய்ப் புள்ளியில் இருந்துதான் கதை நகர்த்தப்பட வேண்டும். மாறாக பல கிளைக் கதைகளை கொண்டு வந்து சேர்க்கக்கூடாது. ஒரு அம்மா தனது மகளின் கல்வி வளர்ச்சிக்கும் பாடுபடுகிறார் என்று கதை தொடங்கினால். கதை முழுவதும் அந்த அம்மாவின் போராட்டம் மகளின் கல்வி வளர்ச்சியை மட்டுமே மையமிட்டு இருக்க வேண்டும். கதையில் வரக்கூடிய எல்லா கதை நிகழ்வுகளும் கதைக் கருவினையொட்டிய காரண காரியங்களுடன் தொடர்பு கொண்டவையாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =