கட்டுமான வேலைக்கு இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட வெ.8.9 மில்லியன் எங்கே??

    கூலாய், செப். 27- 2021 ஆம் ஆண்டு சாலை கட்டுமான வேலைக்கு 123 மில்லியன் வெள்ளி ஜொகூர் ஜி.எல்.சி (Johor GLC இந்த அவல நிலை தொடர்ந்தால் நம் இந்திய பொருளாதாரத்தை எப்படி ஏற்றம் பெறச் செய்வது? இதற்கு யார் காரணம்? இந்த நிலை இனி இப்படிதானா? இது குறித்து, ஜொகூர் மஇகா தலைவரும், இந்தியப் பிரதிநிதியுமான ஆர்.வித்தியானந்தன் நடவடிக்கை எடுப்பாரா என ஜொகூர் மாநில சிறு குத்தகையாளர்கள் மக்மூர் சங்கத் தலைவரும், ஜொகூர் மாநில துணைத் தலைவரும், ஜொகூர் மாநில மஇகா பொருளாதார குழுத் தலைவரு மான எஸ்.சுப்பையா வினவினார். இந்த சாலை கட்டுமான வேலைக்கு 10 விழுக்காடு வருமானம் கிடைப்பதன் மூலம் நிறைய இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஒரேயடியாக வெ.8.9 மில்லியனை குறைத்தால் என்ன நியாயம். இந்த தவறு மீண்டும் நடக்காமல் இருக்க, இந்திய சிறு வணிக குத்தகையாளர்கள் வளர்ச்சிக்கு மஇகா சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். வித்தியானந்தன் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சூளுரைத்தார். இதனிடையே 10 வருட கால போராட்டத்தின் மூலம் இந்த 10 விழுக்காடு ஒதுக்கீட்டை வழங்கிய ஜொகூர் அரசாங்கத்திற்கு சுப்பையாவும், சிகாமட் நாடளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியும், ஜொகூர் மாநில சிறு குத்தகை யாளர்கள் சங்கத் தலைவருமான டத்தோஸ்ரீ ஐ.சிவராஜா நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், கோவிட்-19 தொற்றினால், பாதிக்கப் பட்ட ஜே.கே.ஆரின் கீழ் இயங்கும் பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கு ஜொகூர் அரசாங்கம் அவர்களின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 220 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், பூமிபுத்ரா அல்லாத குத்தகையாளர்களுக்கு இது போன்ற உதவிகள் கிடைக்கவில்லை என மிக வேதனையுடன் கூறினார். ‘அனாக் ஜொகூர்’ (ஹயேம துடிhடிச) குறிப்பாகக் கட்டுமான வேலைகளைச் செய்வதற்கு பூமிபுத்ரா குத்தகை யாளர்களுக்கு இருக்கும் அனைத்து அடிப்படைத் தேவைகளையும், பொருட்கள் இயந்திரங்களின், வங்கி ஆவணங்கள் எல்லாவற்றையும் இந்தியக் குத்தகையாளர்கள் முறையாக வைத்துள்ளனர். ஆகையால், எங்களுக்கும் இது போன்ற உதவிகளைச் செய்ய ஜொகூர் அரசாங்கம் பரிந்துரைக்க வேண்டும் என அவர் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எங்களுக்கான ஒதுக்கீட்டை சற்று பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ) நிர்வாக மூலமாக ஒதுக்கப்பட்டது. அத்தொகையில் 10 விழுக்காடு (12.3 மில்லியன்), இந்தியக் குத்தகை யாளர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியர்களுக்கு 3.4 மில்லியன் வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டது. மீதம் இந்தியர்களுக் காக ஒதுக்கப்பட்ட 8.9 மில்லியன் வெள்ளி எங்கே ?

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    one × three =