கட்டுப்பாட்டை மீறுவோர் நொண்டிச் சாக்குகளைக் கூறுகின்றனர்

0

கோவிட்-19 நோய் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவரும் வேளையில், அரசு அறிவித்திருக் கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு விதியை மக்களில் 5 விழுக்காட்டினர் பின்பற்றுவதில்லை என்று குறை கூறப்படுகிறது.
சிலர் வீட்டு உபயோகத்துக்கு திருப்புளி, வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க மனைவிக்கு மட்டுமே தெரியும் என்றும், நகரைச் சுற்றிப் பார்க்கவும், நாசி கண்டார் உணவைப் சாப்பிடச் செல்வதாகவும் நொண்டிச் சாக்குகளைக் கூறி போலீசாரிடம் பொய் சொல்லி வருவது பிரச்சினையாக உள்ளதாகவும் அவர்கள் நோயின் அபாயத்தை உணராமல் நடந்து கொள்வதாகக் கூறப்படுகிறது. டாங் வாங்கி ஒசிபிடி முகமட் ஃபாமி விஷ்வநாதன் அப்துல்லா கூறுகையில், நடமாட்டக் கட்டுப்பாடு அமலுக்கு வந்த முதல் வாரத்தில், வாகனப் போக்குவரத்து இல்லாத கோலாலம்பூரில் காரில் சுற்றிப் பார்க்க வந்ததாகக் சிலர் கூறியதாகத் தெரிவித்தார்.

செபெராங் பிறை இடைக்கால ஒசிபிடி முகமட் முஸ்தாபா பிடின், ஒரு சிலர் பினாங்கில் விற்கப்படும் மாமா நாசி கண்டார் உணவைச் சாப்பிட பினாங்கு பாலத்தைக் கடக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாசி கண்டாரைச் சாப்பிட தாம் மிகவும் ஆவலாக இருப்பதாக ஒருவர் கூறியதாகவும் மற்றொருவர் தமது குடும்பத்தின ரோடு பினாங்கு தீவைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகவும் குறிப்பிட் டுள்ளார்.
அவற்றைக் கேள்விப்பட்ட தேசிய போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் பாடோர், ஒருவர் திருப்புளியை வாங்கப் போவதாக தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். நடமாட்டக் கட்டுப்பாடு அமலுக்கு வந்த பின்னர், அதனை மீறிய 110 பேர் கைது செய்யப்பட் டிருப்ப தாகவும் அதில் சிலர் போலீ சாரை அவதூறாகப் பேசியதாவும் அச்சுறுத்திய குற்றங்களைப் புரிந்த தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய் தங்களைத் தாக்காது என்று போலீசாருக்குச் சவால் விடுப்போர், சிறையில் இரவைக் கழிக்க வேண்டிவரும் என்று அவர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =