கட்டணத்தை செலுத்த மறுக்கும் அந்நிய நாட்டவர்களின் பயண அட்டை ரத்தாகும்

0

நாட்டிற்குள் நுழைந்த அந்நியத் தொழிலாளர்களிடம் கோவிட் -19 நோய்த் தொற்று தொடர்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
14 நாள்கள் தனிமைப்படுத்துவதற்கான கட்டணத்தை இவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இதற்கான கட்டணத்தை செலுத்தாத அந்நிய நாட்டவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது..
மலேசியர்களைத் திருமணம் புரிந்து கொண்டவர்களின் அட்டை, தற்காலிக வேலை அட்டை உட்பட அனைத்து பயண அட்டைகளும் ரத்து செய்யப்படும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ கைருல் எச்சரித்தார்.
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு அவர்கள் எவ்விதத்திலும் பாதகத்தை ஏற்படுத்த
க்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கோவிட் -19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தீவிர மாகப் போராடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்,
அரசாங்கம் தகவலை அறிந்து கொள்வதுடன் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதிமுறை களைக்
கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நிய நாட்டவர்களையும் பொதுமக்களையும் அவர் கேட்டுக் கொண்டார். கடந்த ஜூலை 24ஆம் தேதி தொடங்கி நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் மலேசியர்களும் அந்நிய நாட்டவர்களும் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 13 நாள்களுக்கு தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கும் அந்நிய நாட்டவர்கள், அதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பும் அனைவரிடமும் தற்போது கோவிட் -19 நோய்த் தொற்று தொடர்பில் அரசாங்கம் கடுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் 14 நாள்களுக்கு தடுத்து வைக்கப்படுகிறார்கள். மேலும், இரண்டாவது
கட்டப் பரிதோதனைக்கும் இவர்கள் மேற்கொள்ள
வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவுப் பிறப் பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two − 2 =