கட்சி தாவியவர்களிடம் இருந்து தலா வெ. 1 கோடி கோருகிறது பிகேஆர்

கட்சி தாவிய அஸ்மின் அலி, ஸுரைடா கமாருடின் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பிரதிநிதிகளிடம் இருந்து தலா ஒரு கோடி வெள்ளியை பிகேஆர் கோருகிறது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் 20 பேரிடமும் பணத்தைக் கோரி கடிதங்களை அனுப்பும்படி தனது வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கட்சியின் பொருளாளர் லீ சியான் சுங் கூறினார்.
கட்சி தாவியதற்காக இந்த இழப்பீட்டைச் செலுத்த இவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தங்களுடைய சொந்த நலனுக்காக தொகுதிகளை தவறாகப் பயன்படுத்தும் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த இழப்பீட்டை வழங்கியாக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
கோரிக்கைக் கடிதம் கிடைத்ததும் ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியும் 7 நாட்களுக்குள் இழப்பீட்டுப் பணத்தைச் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
தவறினால் இவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.
தற்போது அஸ்மின் அலி, ஸுரைடா கமாருடின், சைபுடின் அப்துல்லா ஆகியோர் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − four =