கடைகளில் வேலை செய்ய தயங்காதீர்

0

கடைகளில் வேலை செய்ய உள்நாட்டு இளைஞர்கள் தயங்கக் கூடாது என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் நேற்று இங்கு வேண்டுகோள் விடுத்தார்.அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை நாம் நம்பியிருக்காமல் இருக்க உள்நாட்டு இளைஞர்கள் அதிகமாக இந்த கடை வேலைகளுக்கு வர வேண்டும் என்றார் அவர். கடை வாணிபம், இளைஞர்கள் ஈடுபட வேண்டிய ஒரு முக்கியமான வர்த்தகமாகும். உள்நாட்டு இளைஞர்கள் இத்தகைய வாணிபத்தில் ஈடுபடுகின்ற அதே நேரத்தில் மற்ற இளைஞர்களும் அதில் இடம்பெற அவர்களுக்கு வழி செய்ய வேண்டும் என்றார் அவர்.
நேற்று பழைய ஈப்போ நகரில் கெடாய் டீ அரோய் என்ற கடையை இளைஞர்களே கூடி நடத்துகின்ற ஒரு வாணிபத்தை அமைச்சர் குலசேகரன் ஓர் உதாரணமாக காட்டினார்.
அங்கு அந்நியத் தொழிலாளர்கள் யாரும் இல்லை. அதில் பணியாற்றும் அனைவருமே உள்நாட்டு இளைஞர்கள் ஆவர் என்று நேற்று அந்தக் கடையை திறந்து வைத்து பேசும்போது அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் டத்தோ பண்டார் டத்தோ அஹ்மட் சுவைடி அப்துல் ரஹிம் உடபட பலரும் கலந்து கொண்டனர்.
இது போன்ற இடங்களில் குறிப்பாக அதிகமான சுற்றுப்பயணிகள் வருவார்கள். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும்.
காவல்துறை உறுப்பினர்கள் பெரும்பாலும் இது போன்ற இடங்களில் தொடர்ச்சியாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
நேற்றைய இந்த நிகழ்ச்சியில் 14 இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பல இன கலை, கலாசார நிகழ்ச்சிகளால் வந்திருந்தோரை மகிழ்வித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here