கடலில் வீசப்படும் மீன்கள்

0

பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (எம்.சி.ஓ.) கடந்த மார்ச் 18இல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து மீனவர்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக மலேசிய மீன் வள தொழில் துறை பொது சங்கத்தின் தலைவர் சியா தியான் ஹி கூறுகிறார்.
எம்.சி.ஓ.வின் காரணமாக சில மொத்த விற்பனை சந்தைகள் மூடப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து ஓட்டுநர்களும் விநியோகஸ்தர் களும் முழுமையாக நடமாடும் சூழ்நிலை இல்லாமை போன்ற காரணங்களால் மீன்பிடித் துறையில் சேதங்களும் குழப் பங்களும் ஏற்பட்டிருக்கின்றன என்று சியா மலேசியா கினியிடம் நேற்று தெரிவித் தார்.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் மீனவர்கள் தங்களின் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏகப்பட்ட சிரமங் களை எதிர்நோக்குகின்றனர்.
இதன் காரணமாக தாங்கள் பிடித்த மீன்களை மனவேதனையுடன் மறுபடியும் கடலில் கொட்டும் நடவடிக்கை களில் ஈடுபட்டிருக் கின்றனர் என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.
இதன் காரணமாக எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அடைந்துவரும் நஷ்டம் மில்லியன் கணக்காகும்.
இது எங்கள் சங்கத்தின் கடந்த வாரத்திற்கான மதிப்பீடாகும். இது ஒன்றும் சிறிய தொகை அல்ல. எங்கள் உறுப்பினர்கள் பிடித்த அனைத்து மீன்களையும் நாங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது சாத்தியமல்ல. எனவே மீன்களை மறுபடியும் கடலில் கொட்டுவதை விட எங்களுக்கு வேறு வழி தெரிய வில்லை.
இணைய தளங்களில் மீனவர்கள் மீன்களை கடலில் வீசுவது தொடர்பாக காணொளி ஒன்று வைரலாக பரவி வருவதைப் பற்றி கேட்ட போது இச்சம்பவம் மார்ச் 21இல் பேரா மாநில கரை யோரங்களில் நடந்தது என்று கூறினார்.
இச்சம்பவத்தைப் பற்றி சியா மேலும் விவரித்தார். பொதுவாக அப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை ஒரு தொழிற்சாலைக்கு அனுப்புவது வழக்கமாகும். எனினும் எம்.சி.ஓ.வின் ஆரம்பக் காலகட்டத்தில் அத்தொழிற்சாலை மூடப்பட்டது. எங்களின் சங்கம், மீன்வள முன்னேற்றக் கழகத்திடம் (எப்.டி.ஏ.) புகார் செய்தவுடன் அத்தொழிற்சாலை மீண்டும் திறக் கப்பட்டது. எனினும் ஊழியர்களில் 50 சதவீதம் குறைக்கப்பட்டது?
குறைவான ஊழியர்கள் வேலை செய்வதால் எங்களின் மொத்த மீன்களையும் அத் தொழிற்சாலையால் முழுமை யாகப் பதப்படுத்த முடிய வில்லை. எனவே அம்மீன்களை மீண்டும் கடலில் கொட்டி னோம். ஏனெனில் பதப்படுத்தப்படாத மீன்களை சந்தையில் விற்க முடியாது.
மீன் வளத் தொழிலின் சங்கிலித் தொடரை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் சங்கிலியின் ஒரு பகுதி தூண்டிக்கப்பட்டால் மீன்வளத் துறை முழுவதும் பாதிக்கப் படும் என்று சியா கூறினார்.
எங்கள் உறுப்பினர்கள் மீன்களைப் பிடிக்கிறார்கள். எனினும் வாடிக்கையாளர்களிடம் மீன்களை கொண்டு செல்வதற்கு பதனிடுதல், போக்குவரத்து மற்றும் விநியோகம் போன்ற கூறுகள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
எம்.சி.ஓ. மீனவர்களை கட்டுப்படுத்தவில்லை. நிறைய மீன்களைப் பிடிக்குமாறு அவர் கள் ஊக்குவிக்கப்படுகின் றனர்.
ஆனால் மீனவர்களிட மிருந்து மீன்கள் வாடிக்கை யாளர்களை அடைவதற்கான சங்கிலித் தொடர் தூண்டிக் கப்பட்டிருக்கிறது.
எனவே நிறைய மீன்கள் வீணாக் கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மீனவர்கள் கஷ்டத்திற்கும் நஷ்டத் திற்கும் ஆளாகியிருக்கின்றனர் என்று சியா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =