கடலில் விழுந்த சிறிய ரக விமானத்தை தேடும் நடவடிக்கை

சிறிய ரக விமானம் ஒன்று பினாங்கு தஞ்சோங் பூங்கா அருகே உள்ள கடலில் விழுந்ததாக ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து இதர நிறுவனங்களுடன் சேர்ந்து போலீசார் மீட்பு மற்றும் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆயினும், மாலை 6.30 மணி வரையில் தமது தரப்பு விமானத்தின் எந்தவொரு பாகத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்று தீமோர் லாவூட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. சோஃபியன் சந்தோங் தெரிவித்திருக்கிறார். “வானிலை இருளானதைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் தேடல் நடவடிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் குறித்து எங்களிடம் தகவல் வழங்கப்பட்டால்இன்றும் இந்நடவடிக்கை தொடரப்படும். இதுவரையில், பொது விமான துறையிடமிருந்து (டி.சி.ஏ) போலீசாருக்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லை,” என்று பெர்னாமா தொடர்பு கொண்ட போது அவர் குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில், விமானம் ஒன்று கடலில் விழுந்ததாகக் கூறி, இரு ஆடவர்கள் அதிகார தரப்பிடம் தெரிவித்ததை சோஃபியன் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =