
கிளந்தானின் கோலா பெசார் கடல் பகுதியில் கணவாய் மீன்களைப் பிடிக்கச் சென்ற இரண்டு ஆடவர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமையன்று அவர்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து பல மணி நேரத்திற்குத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அவர்கள் இருவரும் கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு மீன்பெட்டியைப் தொற்றியபடி இருப்பதை மீனவர்கள் கண்டனர். அதன் பிறகு அவர்கள் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் சென்ற சிறிய படகொன்று புயலில் சிக்கிக் கவிழ்ந்தது. அவர்களுடன் இருந்த மற்றொருவரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.