கடன் தவணையைச் செலுத்தும் காலத்தை மேலும் நீட்டிக்க வங்கிகளுடன் பேச்சுவார்த்தை

கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்தும் காலத்தை மேலும் நீட்டிக்க பொருளகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் படும் என்று நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.இதற்கு முன்னர் வழங்கப்பட்ட 6 மாத காலத் தவணை செப்டம்பர் மாதம் முடிவடையவிருக்கிறது. அது சம்பந்தமாகப் பலர் அளித்திருக்கும் கோரிக்கைக்கு இணங்க பொருளகங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.
எனினும், அதற்கு இணக்கம் தெரிவிப்பது அவற்றின் முடிவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
பிரசாரனா மலேசியா தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது அவர், இதில் வசதி குறைந்த குடும்பங்கள் மிகவும் பாதிப்படைந்திருப்பதால் அவர்களுக்கு அரசு உதவ எண்ணம் கொண்டிருந்தாலும், பொருளகங்களின் நிலைமையையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.
கடன் தவணை வழிமுறையை மாற்றியமைக்க பொதுமக்கள் பொருளகங்களோடு தொடர்பு கொண்டு, விவாதித்துப் பரிகாரம் காண வேண்டும்
இதனிடையே, மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசு அமல்படுத்திய மை30 எனும் திட்டத்தின் வாயிலாக ரேப்பிட்கேஎல்லின் எல்ஆர்டி, எம்ஆர்டி, பிஆர்டி, மோனோ ரயில் போன்ற போக்குவரத்து வசதிகளுக்கு ஜூன் 15 ஆம் தேதி வரை 62,000 பேர் பதிந்து கொண்டு பயனடைந்து வருவதாக தெங்கு ஸாஃருல் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here