கடன் தடை நீக்கத்திற்காக 10,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது பேங்க் இஸ்லாம்

0

ஆகஸ்ட் மாதம் முதல் நேற்று செப். 15 ஆம் தேதி வரை சில்லறை பிரிவு சம்பந்தப்பட்ட கடனைத் திரும்பச் செலுத்தும் தடை நீட்டிப்புக்காக பேங்க் இஸ்லாம் 10, 000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
பேங்க் இஸ்லாமின் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் முசாம் முகமட் கூறுகையில், இந்த மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றார்.இந்த நோக்கத்திற்காக, கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு, ஆறு மாத கால அவகாசம் இம்மாதம் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் என்பதைக் கருத்தில் கொண்டு சிறந்த தீர்வை ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
“முழுமையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்த சில வாடிக்கையாளர்களின் விண்ணப்பங்களை நான்கு வேலை நாட்களில் மட்டுமே செயல்படுத்த முடியும். சில வாடிக்கையாளர்கள் தாமதமாக தங்கள் ஆவணங்களை ஒப்படைத்தால் அதிக நேரம் எடுக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்“ என்று அவர் கூறினார். தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்திற்கு (பி.டி.பி.டி.என்.) இன்று ரிம40,000 மதிப்புள்ள காசோலையை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். இதில் பி.டி.பி.டி.என். தலைமை நிர்வாகி அமாட் தர்ஸுகி அப்துல் மஜிட்டும் கலந்து கொண்டார். கடனைத் திரும்பச் செலுத்துதல் மற்றும் நிதி உதவி தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக பேங்க் இஸ்லாம் தொடர்ச்சியாக இரண்டு சனிக்கிழமைகளில் (செப்டம்பர் 12 மற்றும் 19) 10 கிளைகளையும் திறந்து வைத்துள்ளதாக முகமட் முஹாஸாம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம், அரசாங்கம் மூன்று மாத கால அவகாச நீட்டிப்பை கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − seventeen =