கடன் செலுத்துவதை நீட்டிப்பதால் கடும் பிரச்சினைகள் உருவாகும்

0

வங்கிகளுக்குக் கடன் செலுத்தும் தவணைக் காலத்தை மேலும் 3 மாத காலத்துக்கு நீட்டிப்பதால், அது பிரச்சினையை தற்காலிகமாகத் தீர்க்குமே ஒழிய, நீண்ட காலத்துக்கு பலனளிக்காது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியர்களில் 20 விழுக்காட் டினர் சுயதொழில் செய்பவர்கள். நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலத்தில் இப்பிரிவினரே அதிகம் பாதிக்கப் பட்டனர். அதில் 90 விழுக்காட்டினர் தங்களின் 50 விழுக்காட்டு வருமானத்தை இழந்தனர்.
பிரதமர் முஹிடின் அறிவித்த கடன் செலுத்தும் தவணைக் காலத்தை நீட்டிப்பது சுய தொழில் நடத்துபவர்களுக்கும் வேலையிழந்த வர்களுக்கும் உதவாது.
சம்பளம் குறைக்கப்பட்டவர்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர கட்டணத்தைக் குறைக்க விண்ணபிக்கலாம். அது வேலையிழந்து இன்னும் மறு வேலை கிடைக்காதவர்களுக்கு மட்டுமே என்று முஹிடின் அறிவித்திருந்தார்.
எனினும், செலுத்தும் கடன் தொகையைக் குறைப்பது வங்கிகளின் பொறுப்பாகும். குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கடன் தொகை குறைக்க வாய்ப்பிருக்கிறது.
எனவே, இந்தப் பிரச்சினைகள் யாவற்றிற்கும் முழுமையான திட்டங்களைத் தீட்டி, நடவடிக் கையை அரசு எடுக்க வேண்டு மென அவர் கேட்டுக் கொண்டார்.
அதிகரித்து வரும் வேலை யின்மை, வறுமை ஒழிப்பு, சமமான வாய்ப்புகள், ஏழைகளுக்கு உதவும் திட்டம், பொருளாதார மீட்பு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவி ஆகியவற்றிற்கு முறையான திட்டங்கள் தீட்டப்பட வேண்டுமென அன்வார் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =