கடனைத் திருப்பிச் செலுத்தாத ஆடவரின் அடுக்குமாடி வீட்டில் வெடி குண்டு

0

கடனைத் திருப்பிச் செலுத்தாத ஆடவர் ஒருவரின் வீட்டுக்குள் சீன நாட்டைச் சேர்ந்த மூன்று ஆடவர்கள் கத்தி மற்றும் பையில் சுற்றப்பட்ட இரண்டு வெடி குண்டுகளை வைத்தனர். இந்தச் சம்பவம் புக்கிட் கம்பீர் பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றில் நேற்று இரவு 7.00 அளவில் நடந்ததாக தீமோர் லாவுட் மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி சே சமானி சே அவாங் கூறினார்.
சம்பவத்தின் போது கடனை வசூலிக்கச் சென்ற அந்தச் சீன நாட்டைச் சேர்ந்த மூன்று பேரும், கடன் வாங்கிய ஆடவர் வீட்டின் உள்ளே நுழைந்து கடனைச் செலுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் கடன் வாங்கிய ஆடவர் பணத்தை இணையம் வழியாக அனுப்புவதாகக் கூறியதுடன், கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர் மேலும் கூறினார். இதனை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்ததால் அந்தச் சீன நாட்டு ஆடவர்கள் கை கலப்பில் இறங்கிய வேளையில், சொந்தமாகத் தயாரித்ததாக நம்பப்படும் 2 வெடி குண்டுகளை அந்த வீட்டில் வைத்ததாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்ததாக ஏசிபி கூறினார்.
வெடிகுண்டு ஆய்வு வல்லுநர்கள் சம்பந்தப்பட்ட விட்டுக்கு வழவழைக்கப்பட்டு அந்த வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்ததாக அவர் சொன்னார். மேலும் கடன் வாங்கிய ஆடவர், ஒரு முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனர் என்றும், அவர் நம்பிக்கை மோசடி செய்து பலரின் பணத்தை அபகரித்திருப்பதாகவும் காவல் துறைக்கு தகவல் கிடைத்திருப்பதால், அது குறித்து தீவிர விசாரணை செய்வதற்கும் வெடி குண்டுகளை வைத்த ஆடவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் காவல் துறையின் சிறப்புக் குழு பணிக்கப்பட்டுள்ளதாக ஏசிபி செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =