கடத்தப்பட்ட மின்னியல் சாதனங்கள் எரிப்பு

சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட மின்னியல் சாதனங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் அண்மையில் இங்குள்ள கம்போங் செர்டாங் பிளா காட்டுப் பகுதியில் எரிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து பந்திங் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் சம்பவ இடத்திற்குச் சென்றார்.
பின்னர் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மாநகர் மன்ற அதிகாரிகள், அப்பகுதியில் நடத்திய சோதனையில் பல மின்னியல் சாதனங்கள் தீயில் அழிந்துள்ளது தெரிய வந்தது.
போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக இந்தச் செயலைப் புரிந்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.
விரைவில் நடக்கவிருக்கும் மாநகர் மன்றக் சந்திப்புக் கூட்டத்தில் இது குறித்து பேசவிருப்பதாக லாவ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 7 =