கடத்தப்பட்டு, காணாமற்போன மதகுருவின் மனைவி சுசானாவிற்கு உலக மகளிர் வீராங்கனை விருது

அமெரிக்க நாட்டு (யு.எஸ்.) அரசாங்கம் இவ்வருடம் உலகத்தின் பலநாடுகளி லிருந்து 12 பெண்மணிகள் உலக மகளிர் வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப் பட்டிருப்பதாக அறிவித்திருந் தது. அவற்றில் காணாமற்போன பாஸ்டர் ரேமன் கோவின் துணைவியார் சுசானா வியூவும் அடங்குவார். இதனை கோலாலம்பூரில் உள்ள யு.எஸ். தூதரகம் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியது. மேலும் அவ்வறிக்கை சுசானா பள்ளிக் கூட தலைமையாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

தனது கணவர் ரேமேன்கோ கடத்தப்பட்டதிலிருந்து எந்த அச்சமுமின்றி மனித உரிமை போராட்ட நடவடிக்கைகளில் தன்னை அவர் அர்ப்பணித் துக் கொண்டிருக்கிறார். தன் கணவரை போன்றே அதே சூழ்நிலையில் கடத்தப் பட்ட மற்றவர்களுக்காகவும் சுசானா போராடியிருக்கிறார். அதில் அமிரி செ மாட், ஜோஸ்கூவா ஹில்மி மற்றும் அவரின் மனைவி ரூத்தும் அடங்குவர். அவர்களுக்காக வும் சுசானா போராடி வருகிறார் என்று கூறுகிறது. சுகாஹாம் எனப்படும் மலேசியா மனித உரிமை ஆணையம் அவரின் கணவர் காணமற்போன சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் முழு ஒத்துழைப்பை அவர் நல்கியிருக்கிறார்.

தமது கணவர் காணாமற் போன சம்பவம் தொடர்பாக அரசாங்கம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுசானா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது என்று அவ்வறிக்கை மேலும் குறிப்பிட்டது. இதற்கிடையே உலக நாடுகளிலிருந்து இவ்விரு திற்கு தேர்வு செய்யப்பட்ட 12 பெண்மணிகள் யு.எஸ். உள்துறை இலாகா அலுவல கத்தில் தங்களின் விருது களை பெற்றுக் கொள்வார் கள். அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மைக்கில் போம் பியோ அவ்வைபவத்தைத் தொடங்கி வைப்பார்.

அதிபரின் துணைவியார் மெலானியா டிரம்ப் வெற்றி பெற்ற பெண்களின் சாதனை களைப் பற்றி உரை ஒன்றை வழங்குவார். அமைதி நீதி மனித உரிமைகள், ஆண்-பெண் பால் சமத்துவம் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் போன்ற துறைகளில் தங்களின் சொந் தப் பாதுகாப்பையும் பொருட் படுத்தாமல் அச்சமின்றி போராடி வெற்றி கண்ட வீராங் கனைகளுக்கு கடந்த மார்ச் 2007லிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது. இதுவரை 77 நாடுகளைச் சேர்ந்த 146 பெண்மணி களுக்கு உலக மகளிர் வீராங் கனை விருது வழங்கப்பட்டி ருப்பதாக கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க நாட்டு தூதரகத்தின் அறிக்கை கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =