கச்சா செம்பனை எண்ணெய் ஒரு டன்னுக்கு ரிம.9,300 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கச்சா செம்பனை எண்ணெயின் (சிபிஓ) விலை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா செம்பனை எண்ணெயின் விலை ஒரு டன் ரிம.9,300ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் மேற்கொல்லப்பட்டும் பல வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்த எண்ணிக்கையை அடைய முடியும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் பொருட்கள் அமைச்சர் டத்தோ ஜுரைடா கமாருடின் கூறினார்.
“மூன்றாவது காலாண்டில் கச்சா செம்பனை எண்ணெயின் விலை ரிம9,300ஐ எட்டும் என்று நாங்கள் நம்புகின்றோம். இது ஒரு குறிப்பிட்டத்தக்க அதிகரிப்பாகும்“ என்று அவர் ரப்பர் பதப்படுத்தும் மையம் மற்றும் ரப்பர் தொழில் மாற்றத் திட்டம் (கூஹசுழுநுகூ) ஆகியவற்றுக்கான தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த மாத தொடக்கத்தில் கச்சா செம்பனை எண்ணெயின் விலை ரிம.8,000க்கு மேல் உயர்ந்தது. கடந்த வியாழன் நிலவரப்படி இது ஒரு டன்னுக்கு ரிம.7,546 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கச்சா செம்பனை எண்ணெயின் விலை உயர்வு உண்மையில் விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால், இந்த விலை உயர்வினால் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் செம்பனை எண்ணெய் தொடர்பான பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என்று ஜுரைடா கூறினார்.
“இருப்பினும், நாங்கள் இன்னும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகுந்த மானியங்களை வழங்கி வருகின்றோம். எனவே, செம்பனை எண்ணெயின் விலை ஏற்றம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்காது என்று நாங்கள் நம்புகின்றோம்” என்று அவர் கூறினார்.
பெருந்தோட்டத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முன்னர் அறிவிக்கப்பட்ட 32,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருகை குறித்து கருத்துத் தெரிவித்த ஜுரைடா, ஏப்ரல் மாத இறுதியில் ஆதிகமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக
கூறினார்.
“நாங்கள் அவர்களை நாட்டிற்குள் அழைத்து வரும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றோம்“ என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + two =