ஓய்வூதியத்தை நிறுத்தத் திட்டமா? கியூபெக்ஸ் அதிர்ச்சி

0

இப்போதைய ஓய்வூதிய முறையை நிறுத்தும் முடிவுக்கு கியூபெக்ஸ் எனப்படும் பொதுச்சேவை பணியாளர் சங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது.
இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று கியூபெக்ஸ் தலைவர் டத்தோ அஸிஸ் மூடா கூறினார்.

பொதுச்சேவை தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ போர்ஹான் டோலா எதிர்வரும் காலங்களில் புதிதாக அரசு பணியில் சேர்க்கின்றவர்களுக்கு ஓய்வூதியத்துக்கு பதில் அவர்களின் பணி ஓய்வு காலம் நீட்டிக்கப்படும் என கூறியிருந்தார்.
வரும் 2020ஆம் அண்டுக்குள் ஓய்வூதியத்தைக் கொண்ட நிரந்தர அரசு பணியாளர்களை சேர்க்கும் நடவடிக்கை நிறுத்தப்படும் என்றார் அவர்.
இது சம்பந்தமாக விரிவான விவாதம் நடைபெற வேண்டும். அரசு ஊழியர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கியூபெக்ஸ் தலைவர் போர்ஹான் தொடர்ந்து கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 6 =