ஓமிக்ரோன் கிருமியைத் தடுக்க மூத்த குடிமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும் வேண்டும்

ஓமிக்ரோன் உருமாறிய கோவிட்-19 கிருமியைத் தவிர்க்க மூத்த குடிமக்களும் பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டவர் களும்வெளிநாடு செல் வதைத் தவிர்க்க வேண்டுமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டுள்ளார். ஓமிக்ரோன் கிருமி பரவி வரும் தகவலைத் தொடர்ந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகளில் இதுவும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார். மேற்கண்ட கிருமி பரவியிருக் கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, எஸ்வாத்தினி, லெசோத்தோ, மொஸாம்பிக், நமிபியா, ஸிம்பாப்வே ஆகிய நாட்டுப் பயணிகளுக்கு மலேசியா வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பானது அனைத் துலக மாணவர்களுக்கும் வெளி நாட்டுத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என்று கைரி தெரிவித்தார். இந்தத் தற்காலிகத் தடையுத்தர வானது வெளிநாடுகளில் இருக்கும் மலேசியர்களுக்கும் பொருந்தும். ஆயினும், அவர்கள் அந்நாடுகளில் இருந்து வருவதற்கு 72 மணி நேரத்திற்குள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டதோடு, இங்கு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் அந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஓமிக்ரோன் கிருமி பரவியிருக்கும் நாடுகளுக்கு மலேசியர்கள் செல்லத் தடை விதிக்கப்படுவதாகவும் அந்த நாடுகளுக்குச் செல்லும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயண தட அனுமதிக்கும் தடை செய்யப்படும் என்றும் கைரி தெரிவித்தார். தற்போது செலுத்தப்பட்டுவரும் நாளொன்றுக்கான 120,000 பூஸ்டர் தடுப்பூசி எண்ணிக்கை 150,000 ஆக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். V

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − two =