ஓஎஸ்ஏ சட்டம் ஏற்புடையதுதான்

0

தம்மைப் பொறுத்தவரை 1972ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தில் (ஓஎஸ்ஏ) எந்தச் சர்ச்சையும் இல்லை என சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் இலாகா துணை அமைச்சர் முகமட் ஹனிபா மைடின் கூறினார்.


இந்தச் சட்டத்தை முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்ததால்தான் பிரச்சினை உருவெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.


இருப்பினும் இந்தச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் குறித்து அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வருவதாக அவர் சொன்னார். கடந்த காலங்களில் இந்தச் சட்டம் குறித்து பிரச்சினை எதுவும் எழவில்லை. ஆனால் இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால்தான் பிரச்சினை உருவெடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.


கடந்த காலங்களில் அதிகார துஷ்பிரயோகத்திற்குத்தான் ஓஎஸ்ஏ பயன்படுத்தப்பட்டது. ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதற்கல்ல என அவர் சொன்னார்.


தகவல் சுதந்திரச் சட்டத்தை வகுக்க (எப்ஐஏ) இதர நாடுகளின் அமலாக்கத்தை ஒரு வழிகாட்டியாகப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவாதாக ஹனிபா தெரிவித்தார்.
அதே வேளையில் ஓஎஸ்ஓவை அகற்றுவதா அல்லது மேம்படுத்துவதா என்பது குறித்தும் இன்னும் பரிசீலனையில் இருந்து வருவதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 7 =