ஒலிப்பதிவு உண்மை என்றால் ஸாஹிட் விலக வேண்டும்!

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் உரையாடல் தொடர் பான ஒலிப்பதிவு உண்மை என நிரூபணமானால் அம்னோ தலைவர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி விலக வேண்டும் என அக்கட்சியின் ஆலோசகர் மன்றத் தலைவர் தெங்கு ரஸாலி ஹம்ஸா வலியுறுத்தினார். “ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் கசிந்துள்ள அந்த ஒலிப்பதிவு உண்மையா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை” என முன்னாள் நிதியமைச்சருமான அவர் சொன்னார். இருப்பினும் அந்த ஒலிப்பதிவு ஸாஹிட் ஹமிடியின் குரல் போல்தான் தெரிகிறது என குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரு மான அவர் சொன்னார். அப்படி அந்த ஒலிப்பதிவு உண்மை என தெரிய வந்தால், அம்னோ தலைவர் பதவி வகிக்க ஸாஹிட் ஹமிடி தகுதியற்றவர் என்றுதான் தம்மால் கூற முடியும் என அவர் குறிப்பிட்டார். இது நல்லதாகத் தெரியவில்லை. ஒரு தலைவர் அப்படி நடந்து கொள்ளக் கூடாது. ஒரு கட்சித் தலைவர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என தெங்கு ரஸாலி சுட்டிக்காட்டினார். அண்மையில் நடந்த அம்னோ பேராளர்கள் மாநாடு குறித்து அன்வார் மற்றும் ஸாஹிட் உரையாடுவது போல் வெளியான ஒலிப்பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + twenty =