ஒலிநாடாப் பதிவு உண்மையானதுதான்

ண்மையில் வெளியிடப்பட்ட பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டம் சம்பந்தமான ஒலிநாடாப் பதிவு உண்மையானதுதான் என்று அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.
இரண்டு மணி நேரம் ஓடும் அந்த ஒலிநாடாவில், தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் பேசப்பட்டவை பதிவாகியிருப்பதாகத் தெரிவித்தார்.
அந்தப் பதிவில், பிரதமர் பதவி சம்பந்தமாக இரு பிரிவினர் கருத்துகளைச் சொல்லி கடுமையாக விவாதித்தது உண்மையில் நடந்ததுதான். ஒரு தரப்பினர், துன் மகாதீர், அன்வாருக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய வேளையில், மற்றோர் அணியினர், பிரதமர் பதவியைப் பற்றிப் பேசுவது கூட்டணியின் ஒற்றுமையைக் குலைக்கும் என்றும், அது பற்றிப் பேசாமலிருப்பதே நல்லது என்றும் வாதிட்டது.
அக்கூட்டத்தில் தாம் எதுவும் பேசவில்லை என்றும், இறுதியில் பதவியை விட்டு விலகுவது தம்மைப் பொறுத்தது என்றும் 2020ஆம் ஆண்டு நடைபெறும் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் பதவி துறக்க வாய்ப்பிருப்பதாக மகாதீர் குறிப்பிட்டார்.
முதலில் ஓராண்டு, அடுத்து ஈராண்டுகள், அதன் பின்னர் ஏபெக் மாநாடு முடியும் வரை என்று சொல்லப்பட்டது. தாம் அதற்கெல்லாம் மறுப்பு ஏதும் சொல்லாமல் இருந்ததாக அன்வார் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் துரோகிகள் எப்போதும் துரோகிகளாகவே இருப்பார்கள். அவர்களின் திட்டமே மகாதீரைப் பாதுகாப்பது இல்லை. ஆனால், பக்காத்தான் கூட்டணியின் வாக்குறுதியை நிர்மூலமாக்குவதுதான் என்று அவர் குற்றம் சாட்டினார்.
பல ஆண்டுகளாக அவர்களைத் தமக்குத் தெரியுமென்றும் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டம் நடைபெற்று, இரண்டு நாள்களுக்குப் பின்னர் துரோகிகள் அனைவரும் ஷெரட்டன் ஹோட்டலில் கூடி, பக்காத்தான் ஹராப்பானை கவிழ்த்தனர். அதன் பின்னர் மார்ச் 1ஆம் தேதி முஹிடின் பிரதமராக நியமனம் பெற்றார் என அன்வார் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 16 =