ஒரு புதிய மலேசியாவை எதிர்பார்ப்போம்!

0

8 வது பிரதமராக டான் ஸ்ரீ முஹிடினை தேர்ந்தெடுத்ததன் மூலம், கோலாலம்பூர் சீன சங்கம் பொதுமக்களிடமிருந்து சில கருத்துகளைப் பெற்றுள்ளது.
இதன் தொடர்பான அறிக்கை நேற்று கோலாலம்பூர் சீன சட்டசபை மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. “இந்த அறிக்கையின் மூலம் இந்த புதிய அரசாங்கத்திற்கு எங்கள் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் தெரிவிக்க விரும்புகிறோம். மேலும், புதிய அரசாங்கம் எந்தவொரு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு மக்களின் கோரிக்கைகளை கேட்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார் கோலாலம்பூர் சீன சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சாய் கீ கான்.


“அரசியல் ரீதியில் கோலாலம்பூர் சீன சங்கம் எப்போதும் நடுநிலையில் இருக்கும். இப்போது நாடு எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளில் மலேசியாவின் எதிர்காலம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். அதுமட்டுமின்றி, சீன அமைச்சர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக நாங்கள் கவலைப்படுகிறோம். இதன் விளைவாக சீன சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அமைச்சரவையில் தீர்க்கப்படாமல் உள்ளன. மேலும், சீனர்கள் எதிர்கொள்ளும் கல்வி பிரச்சினைகளை வழிநடத்துவதற்கும் தீர்ப்பதற்கும் ஒரு சீன துணை மந்திரி நியமிக்கப்படுவார் என்று முடுஊஹழ நம்புகிறது என்றார் டத்தோ சாய்.
மேலும் அவர் கூறுகையில், அனைத்து மாநிலங்களிலும் சரியான அமைச்சர் இருக்க வேண்டும் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். இது மக்களின் நலன் மற்றும் நம்பிக்கையை கவனித்துக்கொள்வதை உறுதி செய்யும் என்றார்.
கோவிட்-19 இன் தாக்கம் சுற்றுப்பயணிகளின் வருகை குறைந்து பொருளாதாரத்தில் மிகப் பெரிய ஆபத்தை அதிகரித்துள்ளது.
ஆக, இப்புதிய அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். ‘மலேசியாவிற்கு வருகை புரியுங்கள் 2020’ எனும் நோக்கத்தை ஊக்குவிக்க புதிய அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
அதுமட்டுமின்றி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட (பி 40- எம் -40) குடும்பங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவி வழங்க வேண்டும்.
அதற்கும் மேல், மலேசியாவில் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றார். இந்நாட்டில் பட்டதாரிகளுக்கு அரசாங்கம் நிதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் மற்ற நாடுகளுடன் சிறந்த உறவை வளர்க்க புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோலாலம்பூர் சீன சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சாய் கேட்டுக் கொண்டார்.
கலாசார ரீதியில் கடந்த 2 ஆண்டுகளில் இனங்களுக்கும் மதத்திற்கும் இடையிலான உறவு அரசியலில் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆக, வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதிலும் இனங்களுக்கு இடையிலான தவறான புரிதல்களின் சாத்தியக்கூறுகளை அரசாங்கம் தீர்ப்பதிலும் கவனம் செலுத்துமாறு முடுஊஹழ புதிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.


“மலேசியாவின் பொருளாதாரத்தை மாற்றுவதற்கான முக்கிய புள்ளி கல்வி என்று நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம், புதிய கல்வி அமைச்சர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களின் கல்வி குறித்து தொடர்ந்து உதவ வேண்டும். அதுமட்டுமின்றி, புதிய கொள்கைகளை அறிவிப்பதற்கு முன் அல்லது செயல்படுத்தத் தொடங்குவதற்கு முன் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுமாறு கல்வி அமைச்சரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்றார் அவர்.
ஒரு புதிய மலேசியாவை எதிர்பார்ப்பதாக கூறி தனது உரையை முடித்தார் கோலாலம்பூர் சீன சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 8 =