ஒமிக்ரான் அச்சத்தால் சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிப்பது முறையற்றது, அது பலன் தராது – ஐநா.பொதுச்செயலாளர்

கோவிட் தொற்று ஒமிக்ரான் வகையாக உருமாறிய நிலையில் சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிப்பது முறையற்றது என்றும் அது பலன் தராது என்றும் ஐநா.சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.நியுயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக அளவில் பாதிப்பைக் குறைக்க பயணத்தை அனுமதித்து பொருளாதார பாதிப்பில்லாமல் பார்த்துக் கொள்வதுடன் இதர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.பயணங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான பரிசோதனை கருவிகள் நம்மிடம் உள்ளன என்பதால், அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.ஆப்பிரிக்க யூனியன் தலைவர் மற்றும் ஐநா.பொதுச்செயலாளர் இடையே நடைபெற்ற சந்திப்பை அடுத்து குட்டரஸ் விமானங்களுக்குத் தடைவிதிப்பதை கண்டிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 3 =