ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர்; இந்திய வீரர் கருணாடே வெற்றி

குருகிராம், நவ. 25- ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் கருணாடே வெற்றி பெற்hர். இந்தியாவின் ஹரியானாவில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் தமிழக வீரர் அனிருத் சந்திரசேகர், சக வீரர் கருணாடே சிங்கை சந்தித்தார். முதல் செட்டை அனிருத் 4–6 என்ற கணக்கில் இழந்தார். அடுத்த செட்டிலும் ஏமாற்றிய இவர் 2–6 என கோட்டை விட்டார். முடிவில் அனிருத் 4–6, 2–6 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு முதல் சுற்றில் பிரிட்டனின் அலெக்சிஸ் கேன்டர், இந்தியாவின் சந்திரலை 6–1, 6–2 என வீழ்த்தினார். பிற போட்டிகளில் கோவியாஸ் (இந்தியா), வேல்ஸ் (ஹங்கேரி) வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர். ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கருணாடே, மாலிக் ஜோடி, இந்தியாவின் ஆனந்த், தாகியா ஜோடியை 6–3, 6–4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 14 =