ஐ.ஓ.ஐ. நிறுவனத்தின் புதிய தலைவராக லீ யோ சோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

0

மலேசிய செம்பனை எண்ணெய் நிறுவனத்தின் 2020-2022ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக டத்தோ லீ யோ சோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2016 முதல் 2020 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற டத்தோ பிராங்கி அந்தோணி தாஸுக்குப் பதிலாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டத்தோ லீ யோ சோர், ஐ.ஓ.ஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் குழு நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றுவார். இவர் பிப்ரவரி 2009 முதல் மார்ச் 2020 வரை மலேசிய செம்பனை எண்னெய் சங்கத்தின் தலைவராக இருந்துள்ள என்று மலேசிய செம்பனை எண்ணெய் நிறுவனம் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருந்தது.
“தொழில்துறையில் அவரது நீண்ட கால அனுபவம் நிச்சயமாக தோட்டத் துறையைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நிறுவனத்திற்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கும்“ என்று அது மேலும் கூறியது.


இதற்கிடையில், ஹப் செங் பிளாண்டேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அவு யோங் சீவ் பா மீண்டும் எம்.பி.ஓ.ஏ. துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1999ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, மலேசிய செம்பனை எண்ணெய் நிறுவனம் மலேசியாவில் 40 சதவிகிதம் அல்லது 1.82 மில்லியன் ஹெக்டர் செம்பனை மரம் நடப்பட்ட பகுதியை நிர்வகிக்கும் 121 தோட்ட நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. இது நாட்டின் தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 9 =