ஐஸ்கிரீம் வாங்கி தராத கணவன்.. 16 வயது மகளை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த தாய்.. பின்னர் செய்த விபரீத செயல்..!

0

நாமக்கல் மாவட்டத்தில் தாயே மகளை ரயிலில் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள பரளி ஒத்தையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி கண்ணகி(34). இந்த தம்பதிக்கு 16 வயதில் அகல்யா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், நேற்று பரளியில் திருவிழா நடந்துள்ளது. அதை கான்பதற்காக கண்ணையன் குடும்பத்துடன் சென்றார். அப்போது கண்ணையனிடம் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்குமாறு கேட்டு அழுதுள்ளார்.

ஆனால், அகல்யாவிற்கு கண்ணையன் ஐஸ்க்ரீம் வாங்கி தரவில்லை. இதனால் அவர்களுக்குள் பெரும் தகராறு ஏற்பட்டது. திருவிழா முடியும்வரை 3 பேரும் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனர்.

திருவிழா முடிந்த உடன் மூவரும் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போது ரயில் நிலையத்திற்குள் சென்ற போது, திடீரென்று தாய் கண்ணகி தனது மகள் அகல்யாவை வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன் தள்ளிவிட்டுள்ளார். பிறகு கண்ணகியும் அதே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்த தகவலறிந்த காவல்துறையினர் ரயில்வே அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி காவல்துறையினர் கண்னையனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − one =