ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகல்- நாடு திரும்பினார்

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அணி வீரர்கள் துபாய் சென்றுள்ளனர். கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
வரும் 19ம் தேதி போட்டி தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவர் தனது சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பியிருப்பதாக அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியிருப்பதால், ஐபிஎல் சீசனில் அவர் விளையாட மாட்டார் என்றும், இந்த நேரத்தில் சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அணியின் டுவிட்டர் பக்கத்தில் சிஇஓ விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு வீரர் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னணி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா விலகியிருப்பது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =