ஐஜிபிக்கு 3 கடிதங்கள் அனுப்பி விட்டேன்

0

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட இளைய மகள் பிரசன்னா டிக்ஷா விவகாரம் குறித்து தேசிய காவல்படைத் தலைவர் (ஐஜிபி) அப்துல் ஹமிட் பாடோருக்கு இதுவரை 3 கடிதங்களை அனுப்பியுள்ளதாக எம்.இந்திரா காந்தி கூறினார்.
காணாமல் போன தமது மகள் விவகாரம் குறித்து ஒரு சந்திப்பிற்காக கடைசியாக கடந்த திங்கள்கிழமை ஐஜிபிக்கு தாம் கடிதம் எழுதியதாக அவர் சொன்னார்.
“தம் மகள் பிரசன்னாவை ஒன்றிணைக்க ஒரு மகிழ்ச்சியான முடிவு பிறக்கும்” என ஐஜிபி உறுதியளித்ததைத் தொடர்ந்து இக்கடிதங்களைத் தாம் எழுதியதாக அவர் தெரிவித்தார்.
“எங்களைச் சந்திக்க ஐஜிபி இணக்கம் தெரிவிப்பார் என நாங்கள் நம்புகிறோம். மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவிற்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார் அவர்.
காணாமல் போன பிரசன்னா டிக்ஷாவைத் தேடும் முயற்சியில் போலீஸ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கடந்த ஜனவரியில் ஐஜிபி கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் தாம் தனிப்பட்ட கவனம் செலுத்தி இந்திரா காந்தியிடம் பிரசன்னாவைச் சேர்த்து வைக்கப்போவதாக அவர் உறுதியளித்திருந்தார்.
“எனது மகள் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. என் மகள் நலமுடன் இருப்பார் என நான் நம்புகிறேன்” என இந்திரா காந்தி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + three =