ஐஎஸ்எல் கால்பந்து – சென்னையை மீண்டும் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது கோவா

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னையின் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை சந்தித்தது. ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் கோவா அணியின் அஹமது ஜாவோ ஒரு கோலும், பிராண்டன் பெமண்டிஸ் 41-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர்.

தொடர்ந்து, 46வது நிமிடத்தில் ஹியூகோ பவ்மஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் கோவா அணி 3-0 என முன்னிலை வகித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை அணியின் ஆண்ட்ரி செம்பிரி 57-வது நிமிடத்திலும், ரபெல் கிரிவல்லாரோ 59-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

கோவா அணியின் பெரான் கரோமினாஸ் 63வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் கோவா அணி 4-2 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதியில் 91-வது நிமிடத்தில் சென்னை அணியின் ரபெல் கிரிவல்லாரோ மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், கோவா அணி 4-3 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப் சி அணியை மீண்டும் வீழ்த்தியது.
இந்த வெற்றி யுடன் புள்ளிப்பட்டியலில் கோவா அணி முதலிடம் பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 11 =