ஐஎஸ்எல் கால்பந்து – ஒடிசாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பெற்றது கோவா

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் எப்சி கோவா மற்றும் ஒடிசா எப்சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே கோவா அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அந்த அணியின் ஜாக்கிசந்த் சிங் அபாரமாக ஆடி 2 கோல்கள் அடித்து அசத்தினார். மேலும் அந்த அணியின் வினித் ராய், பெரோனஸ் கம்மினஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா அணி சார்பில் 2 கோல் அடித்தனர்.
இறுதியில், கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது. இதன்மூலம் கோவா அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் கோவா அணி தான் ஆடிய 15 போட்டிகளில் 9ல் வெற்றி பெற்று 30 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஒடிசா 21 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =