ஏ.எல்.ராகவன் நினைவஞ்சலி கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பினாங்கு மாநில தொடர்புக்குழு சார்பில் நடிகரும் பழம்பெரும் பாடகருமான மறைந்த ஏ.எல். ராகவனுக்கு பினாங்கிலுள்ள கொம்தார் ஆடிட்டோரியத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.
உலகமெங்கும் கொரோனா எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு இதுவரை லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர்.
நடிகரும் பழம்பெரும் பாடகருமான ஏ.எல். ராகவனையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.


கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட இரண்டாவது நாளே அவர் இறந்தார். தமிழ்நாட்டில் உள்ள கடுமையான ஊரடங்கினால் அங்கு கலைத்துறையைச் சார்ந்த எவர் இறந்தாலும் நினைவஞ்சலி எனும் நிகழ்வை நடத்துவது என்பது சாத்தியமில்லை.
இந்நிலையில், பினாங்கு அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இங்கே ஏ.எல்.ராகவனுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அவரின் பிரபலமான பாடல்களை கலைஞர்கள் ரசிகர்களுக்கு படைத்தனர். அவரை பற்றிய குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்டது. இந்நிகழ்விற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தான் நடக்கத் தேவையான ஊன்றுகோல் இல்லாமல் சிரமப்படுவதாக ஏற்பாட்டாளர் ஜரீனாவிடம் தெரிவிக்க, அதை உடனடியாக டாக்டர். பரமசிவன் சார்பில் வாங்கி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அடுத்த நாளே அப்பெண்ணுக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 6 =