ஏழை மக்களும் அரசியலில் ஏற்றம் பெற டான்ஸ்ரீ எம்ஜி பண்டிதன், டத்தோ சம்பந்தன் பாடுபட்டனர்

இந்நாட்டில் இந்திய சமுதாயம் குறிப்பாக ஏழை மக்கள் அரசியலில் ஏற்றம் பெற டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் மற்றும் டத்தோ எம்.சம்பந்தன் கடுமையாக உழைத்தனர் என்று ஐபிஎப் தேசிய தகவல் பிரிவு தலைவர் ச.குமரேசன் கூறினார்.
ஐபிஎப் கட்சியைத் தோற்றுவிக்கும்போது நாட்டிலுள்ள சாமானிய மக்களும் அரசியலில் மிளிர வேண்டும், பாட்டாளி மக்களின் பிள்ளைகளும் கல்வியில் சிறந்த அடைவு நிலையை பெற வேண்டும், அரசாங்கம் வழங்கக்கூடிய வாய்ப்புகள் அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடு இன்றி சென்று அடைய வேண்டும் என்பதுதான் அவரின் விருப்பமாகும்.
இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் கருதி டான்ஸ்ரீ பண்டிதன், ஐபிஎப் கட்சியை தேசிய முன்னணியில் இணைத்துக் கொள்ள கடுமையாகப் பாடுபட்டார்.
அதன்பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற டத்தோ சம்பந்தன், ஐபிஎப் கட்சியை சீர்படுத்தி அனைத்து சட்ட சிக்கல்களில் இருந்தும் காப்பாற்றி கட்சியை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் வரும் பொதுத்தேர்தலில் ஐபிஎப் கட்சி தேசிய முன்னணியில் சின்னத்தில் நாடாளுமன்ற, சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்று அம்னோ தலைவர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த சிலிம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மிண்டும் டத்தோஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி, வரும் பொதுத்தேர்தலில் ஐபிஎப் கட்சி உட்பட தேசிய முன்னணியின் நட்பு கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதிப்படுத்தினார்.
அந்த வகையில் நடப்பு ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகநாதன் கட்சியை மிகச் சிறப்பாக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று கப்பளா பத்தாஸ் தொகுதியின் 28ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகநாதன் பிரதிநிதியாக கலந்து கொண்ட தேசிய தகவல் பிரிவுத் தலைவரும் பினாங்கு மாநிலத்தின் துணைத் தலைவருமான ச. குமரேசன் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =