ஏழைகளுக்கு இலவச காய்கறிகள்

0

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவினால் இதர மாநிலங் களுக்கு காய்கறிகள் விநியோகம் தடைபட்டுள்ள தால் கேமரன் மலையில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைச்சலை ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
பெர்ச்சாமில் உள்ள கம்போங் சிமி சந்தையில் காலை வேளைகளில் இந்த காய்கறிகளை இலவசமாக எடுத்துச் செல்ல வைக்கப் பட்டுள்ளன.
இந்த காய்கறிகளை கீழே கொட்டுவதை விட ஏழை எளியவர்களுக்கு இலவசமாக வழங்கத் தாம் முடிவு செய்ததாக ஜேசன் கொங் (வயது 39) என்ற விவசாயி கூறினார்.
தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு இந்த காய்கறிகள் மிகவும் உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 தாக்கத்தைத் தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவினால் இதர மாநிலங்களுக்கு காய்கறிகளை எடுத்துச் செல்ல லோரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக காய்கறிகள் விற்கப்படாமல் அதிகமாகத் தேங்கி இருப்பதால், வேறு வழியின்றி ஏழைகள் மற்றும் முதியவர்களுக்கு இலவசமாகக் கொடுக்க தாம் முடிவு செய்ததாக அவர் சொன்னார்.
தினமும் வெள்ளரிக்காய், தக்காளி, பீன்ஸ் உட்பட சுமார் 200 பாக்கெட் காய்கறிகளை தாம் ஏழைகளுக்கு வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + twelve =