ஏற்றுமதி தொழில்களில் மலேசியா ரிம63.7 பில்லியனை பெற்றுள்ளது

0

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பொருட்களின் ஏற்றுமதி வருவாயில் மலேசியா மொத்தம் ரிம63.7 பில்லியன் அல்லது 14.2 சதவீதத்தை பதிவு செய்துள்ளது என்று தோட்டத் தொழில்துறை மற்றும் மூலப் பொருள் அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் கைருடின் அமன் ரசாலி தெரிவித்தார்.
பொருட்களின் ஏற்றுமதியின் மதிப்பு கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட ரிம61.05 பில்லியனில் இருந்து 4.3 சதவீதம் சற்று அதிகரித்துள்ளது என்றார்.
“இந்த வளர்ச்சி செம்பனை எண்ணெய் ஏற்றுமதி மற்றும் ரப்பர் கையுறைகளின் ஏற்றுமதியால் அதிகரித்துள்ளது” என்று அவர் அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கூறினார்.
கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடும்போது இக்கால கட்டத்தில் செம்பனை எண்ணெய்களின் ஏற்றுமதி மதிப்பு 3.2 சதவீதம் அதிகரித்து ரிம33 பில்லியனாக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் ஜனவரி-ஜூன் 2020 காலகட்டத்தில் ரப்பர் பொருட்களின் ஏற்றுமதி 18.3 சதவீதம் அதிகரித்து 8 பில்லியனாக பதிவு செய்துள்ளது.
“ஏற்றுமதியின் மதிப்பு அதிகரித்திருந்தாலும், செம்பனை எண்ணெய் பொருட்களின் ஏற்றுமதி 12.3 சதவீதம் குறைந்து 12.1
மில்லியன் டன்னாக இருந்ததால் வேளாண் பொருட்களின்
ஏற்றுமதி அளவு குறைந்தது” என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) 7.1 சதவீதம் அல்லது
ரிம20.6 பில்லியன் பங்களித்துள்ளதாக முகமட் கைருடின் தெரிவித்தார்.
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வேளாண் துறை மொத்த வர்த்தக மதிப்பாக
ரிம82 பில்லியனைப் பதிவு செய்துள்ளது. மார்ச் மாதத்தில் கோவிட் -19 தொற்றுநோய் பரவியபோது, தேசிய பொருளாதார மீட்பு திட்டம் (பெஞ்சானா) மற்றும்
பிரிக்காத்தின் ராக்யாட் பொருளாதார தூண்டுதல் தொகுப்பு மூலம் அரசாங்கம் ஏற்றுமதி தொழிலின் வளர்ச்சிக்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக முகமட் கைருடின் தெரிவித்தார். செம்பனை எண்ணெய் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்க, கச்சா எண்ணெய் ஆகியவற்றின் ஏற்றுமதி வரிகளுக்கு இந்த ஆண்டு ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை ரிம 200 மில்லியன் அல்லது 100 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஞசுஐழஹகூஐசூ மூலம் தோட்டக்கலை மற்றும் வேளாண் பொருட்கள் துறையின் கீழ் உள்ள சிறு உரிமையாளர்களுக்கு ரிம20 மில்லியனுக்கான கூடுதல் ஒதுக்கீடு நிதி தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது என்றார் அவர்.
மிளகுத் தொழிலில் உள்ள சிறு உரிமையாளர்களுக்காக மொத்தம் ரிம16.11 மில்லியனும் கோகோ தொழிலுக்கு ரிம2.69
மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + one =