ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்ததால்
வெங்காயத்தின்விலை திடீர் உயர்வு!

நாட்டில் தற்போது இந்திய வெங்காயத்திற்கு மிகப்பெரிய கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெங்காய ஏற்றுமதியை இந்தியா தடை செய்திருப்பதே இதற்கு காரணம் என்று உள்நாட்டு வர்த்தக, பயனிட்டாளர் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
கடந்த ஜுலை மாதம் இந்தியாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் வெங்காயத்தின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளது. அதனால், மலேசியா உட்பட பல நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதியை இந்தியா தடை செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசாங்கம் இந்த தடையுத்தரவை அமலுக்குக் கொண்டு வந்தது. பெங்களூர் ரோஸ் வெங்காயமும் காஞ்சிபுரம் வெங்காயமும் இதில் அடங்கும். மலேசியர்கள் அதிகளவில் விரும்பி சாப்பிடும் வெங்காயமாக பெங்களூர் ரோஸ் மற்றும் காஞ்சிபுரம் வெங்காயம் விளங்குகிறது.
இந்திய அரசாங்கம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் தற்போது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை பயன்படுத்துமாறு உள்நாட்டு பயனீட்டாளர்களை மலேசிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தாய்லாந்து, பாகிஸ்தான், சீனா, நெதர்லாந்து, ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது என்று அமைச்சர் அலெக்ஸாண்டர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here