ஏர் பஸ் கொள்முதல் விவகாரத்தில் எங்களிடம் விளக்கம் பெறப்படவில்லை

ஏர் பஸ் கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தங்களிடம் எந்தவொரு விளக்கமும் பெறப்படவில்லை என ஏர் ஆசியா குழும நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் கமாருடின் மெரானுன் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். இந்த ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் நியாயமான அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறினர்.

ஏர் பஸ் ஊழலில் ஏர் ஆசியாவின் இயக்குனர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை தாங்கள் முற்றாக நிராகரிப்பதாக அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஏர் ஆசியா நிறுவனத்தின் நலன் கருதி, பிரிட்டன் கடுமையான மோசடி குறித்த நடவடிக்கைப் பிரிவு அலுவலகத்தின் விசாரணைக்கு வழிவிட தங்களுடைய பொறுப்புகளில் இருந்து 2 மாதங்களுக்கு தாங்கள் விலகிக் கொள்வதாக அவர்கள் அறிக்கையில் மேலும் தெரிவித்தனர்.
இந்த காலகட்டத்தில் ஏர் ஆசியா குழும நிறுவனம் வழக்கம் போல் இயங்குவதற்குத் தங்களுடைய ஆலோசனைகளை வழங்கப் போவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஏர் பஸ் கொள்முதலில் ஏர் ஆசியாவின் 2 உயர் அதிகாரிகள், 50 மில்லியன் அமெரிக்க டாலர் கையூட்டுப் பெற்றதாக பிரிட்டன் கடுமையான மோசடி குறித்த நடவடிக்கைப் பிரிவு அலுவலகத்தின் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − two =