ஏர் ஆசியா மீண்டும் தங்கம் வென்றது

நேற்று முன்தினம் மலேசிய விளம்பர அங்கீகார பிரதிநிதி சங்க ஏற்பாட்டிலும் மலேசிய வெளிப்புற வர்த்தக மேம்பாட்டுப் பெரு நிறுவனத்தின் ஆதரவிலும் தலைநகர் மெஜஸ்டிக் தங்கு விடுதியில் நடைபெற்ற புத்ரா முத்திரை விருதளிப்பு விழா 2019இல் ஏர் ஆசியா நிறுவனம் தங்கம் வென்றது.
இதன் வழி ஏர் ஆசியா நிறுவனம் கடந்த பத்தாண்டுகளாக மலேசியாவில் அதிகம் விரும்பப்படும் பயணச் சேவை நிறுவனம் எனும் தன் அடையாளத்தை தற்காத்துக் கொண்டது.
உலகின் தலை சிறந்த ஆய்வு ஆராய்ச்சி பிரதிநிதி நிறுவனமான ஐபிஎஸ்ஓஎஸ், 88 நாடுகளைச் சேர்ந்த 16,000க்கும் மேற்பட்ட தனது உறுப்பினர்களைக் கொண்டு மொத்தம் 23 பிரிவுகளில் மலேசியா முழுவதிலுமான 8,000க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விடையளித்தவர்களையும் உட்படுத்திய மிக விசாலமான ஆய்வறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதைப் பெற்றுக்கொண்ட ஏர் ஆசியாவின் அடையாள குறியீட்டின் தலைவர் ருடி காவ் ஏர் ஆசியாவானது எல்லா தரப்பினர்களுடைய பயணச் சேவையின் தேவைகளை எதிரொலிப்பதுடன் அது அடுத்த நிலையிலான வாழ்க்கை உயர்நிலைப் போக்கை கொண்ட பயண நிறுவனமாக வளர்ந்து வருகிறது என்றார்.
இந்த விருதானது எங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்கு அர்ப்பணம். எங்கள் சேவையில் மனநிறைவு கொண்ட எங்கள் சேவையை முன்மொழிந்த எங்கள் சேவையைப் பயன்படுத்திய எங்கள் விருந்தினர்களுக்கு நன்றி.
இந்நிலையை நாங்கள் அடைய கடும் உழைப்பை வழங்கிய எல்லா தரப்பைச் சேர்ந்த ஏர் ஆசியா ஊழியர்களுக்கும் நன்றி. அவர்களின் உழைப்பு இல்லையெனில் இவ்விருது இல்லை என்றார் ருடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =