ஏர் ஆசியா மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது வெ.480 மில்லியன் கோரி வழக்கு

0

மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் (MAHB) துணை நிறுவனமான மலேசியா ஏர்போர்ட்ஸ் (சிப்பாங்) சென்டிரியான் பெர்ஹாட் (MASSB) மீது வெ.479.78 மில்லியனுக்கு உரிமை கோரி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ஏர் ஆசியா வழக்குத் தொடர்ந்துள்ளதாக ஏர் ஆசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி ரியாட் அஸ்மத் கூறினார். ஆஹளுளுக்ஷக்கு எதிரான இந்த உரிமை கோரல், கேஎல்ஐஏ 2இல் அந்நிறுவனம் வழங்கிய அலட்சியமான விமான நிலைய வசதிகள் நிர்வகிப்பினாலும் பராமரிப்பினாலும் பின் தங்கிய சேவைகளினாலும் ஏர் ஆசியா பெர்ஹாட் மற்றும் அதன் சக நிறுவனமான ஏர் ஆசியா ஓ பெர்ஹாட் எதிர்கொண்ட இழப்புகள் மற்றும் சேதங்களைக் கருத்தில் கொண்டு கோரப்பட்டுள்ளது. ஆஹழக்ஷஇன் துணை நிறுவனமான கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் KLIA 2ஐ நிர்வகிக்கும் மற்றும் இயக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.
மலேசிய வான் போக்குவரத்து ஆணையமான மாவ்கோம் சட்டத்தின் பிரிவு 74-78 படி, ஏர் ஆசியா மற்றும் ஏர் ஆசியா ஓ இவ்விவகாரம் தொடர்பில் சமாதானம் பெற அணுகியிருந்தது.
இருப்பினும், சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தித்தர மாவ்கோம் மறுத்துவிட்டது. மேலும், மாவ்கோமின் இந்த செயலற்றத் தன்மையை நிதித்துறை மறு ஆய்வு செய்யக் கோரி ஏர் ஆசியா மேற்கொண்ட முயற்சியும் தள்ளுபடி செய்யப்பட்டது. நாங்கள் இதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் மலேசியா ஏர்போர்ட்ஸ் மற்றும் மாவ்கோம் ஆகியவை எங்களை இக்கட்டாயத்திற்குத் தள்ளிவிட்டன என்று நேற்று ஏர் ஆசியா தலைமை நிர்வாக அதிகாரி பெஞ்சமின் இஸ்மாயிலுடன் நடந்த ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தை இணக்கமாகத் தீர்ப்பதற்கான எங்களது சிறந்த முயற்சிகளுக்கு மத்தியில் சரியான முறையும் தளமும் அமையாததால் வேறு வழியின்றி எங்கள் நலன்களைப் பாதுகாக்க இவ்வுரிமை கோரல் மனுவை தாக்கல் செய்யும் கட்டாயத்தில் உள்ளோம்.
இந்த சர்ச்சை, சமாதானத்திற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசியா ஏர்போர்ட்ஸ் எங்கள் மீது சிவில் வழக்கைத் தாக்கல் செய்ததால் தொடங்கியது. நாங்கள் எப்பொழுதுமே எங்கள் பங்குதாரர்களுடனான பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாகத் தீர்ப்பதில் முனைப்புக் காட்டுவோம். மேலும், இந்த வழக்கைத் தாக்கல் செய்வதில், மலேசியா ஏர்போர்ட்ஸ் எங்கள் மீது கடுமையாகவே நடந்து கொண்டுள்ளது என நாங்கள் வாதிடுகிறோம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here